உள்நாடு

நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பின் கிரிக்கட் சுற்றுப்போட்டி; இலங்கை தூதுவர் பங்கேற்பு

கத்தாரில் இயங்கி வரும் நேகம மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தோஹா கர்ராபாவிலுள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலையின் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சித்தாரா கான் அஸார்ட் அவர்கள் பங்கேற்றார். கௌரவ அதிதியாக தொழிலதிபரும், சமூக சேவகருமான அஷ்ஷேஹ் ABM நவாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர், கவிக்கோ ஜின்னா ஷரீபுத்தீன் உள்ளிட்ட பலருக்கும் பிரதம அதிதியானால் ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அனுராதபுரம் நேகம கிராமத்தை சேர்ந்த 150 க்கும் அதிகமான அங்கத்தவர்களை கோண்டுள்ள இவ்வமைப்பு தமது பிரதேச மக்களின் நலனுக்காக 8 வருடங்களாக கத்தார் நாட்டில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டி சிறப்பாக ஆரம்பமாகின. நடைபெற்ற கிரிக்கட் போட்டியில் Negame Sky Riders மற்றும் Negame Wild Hitters ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய நிலையில் Negame Sky Riders அணியினர் மேலதிக 5 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக Negama Sky Riders அணியின் மிஃராஜ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *