ஊவா,கிழக்கைத் தவிர ஏனைய இடங்களில் சீரான வானிலை
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத் தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் மழை இல்லாத வானிலை நிலவும் எனவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.