பல இடங்களில் மழை பெய்யலாம்
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியாக பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.