சிஸ்டம் சேன்ஜ் என்ற பெயரில் அரசு செய்திருப்பது முறையான செயலல்ல.சஜித் பிரேமதாச.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,அவர் உடல் நிலையில் சற்று தேறிவருவதாகவும், சரியாக எதையும் கூறமுடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவருக்கு இப்படியான ஒரு நிலை ஏற்பட்டிருக்க கூடாது. சிஸ்டம் சேன்ஜ் என்ற பெயரில் தற்போதைய அரசாங்கம் செய்திருப்பது முறையல்ல என தெரிவித்தார்.
இதன்போது எதிர்கட்சி தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.