பல மாவட்டங்களில் மழை..!
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மழை பெய்யும் பிரதேசங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இடியுன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படியாக பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.