கல்பிட்டி பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானித்த தூய தேசத்திற்கான கட்சியின் வட்டார அமைப்பாளர்கள் நியமனம்
தூய தேசத்திற்கான கட்சியின் கல்பிட்டி பிரதேச சபையின் புதிய அமைப்பாளர்கள் நியமிப்பு நிகழ்வு, பிராந்திய அமைப்பாளர் சகோதரர் ஹஸ்லான் அவர்களின் தலைமையில் கல்பிட்டி நகரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.கட்சியின் தொடக்கம் முதல் உறுதியுடன் பயணித்த முக்கிய செயற்பாட்டாளர்கள் இவ்விழாவில் அதிகாரப்பூர்வமாக அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டதோடு, புதிய அமைப்பாளர்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கட்சித் தலைவர் இஷாம் மரிக்கார், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஸம்மில் மற்றும் புத்தளம் மாநகர சபை செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர். எம். ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு, கட்சியின் நோக்கம், இலக்குகள் மற்றும் அமைப்பாளர்களின் பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
