அமானத் வெற்றிக்கிண்ண கிரிகட் சுற்றுப்போட்டி – 2025 கிண்ண அறிமுகத்துடன் போட்டி ஆரம்பம்.
பேருவளை மருதானை அல் அமானத் பாலர் பாடசாலையினால் வருடாந்தம் நடாத்தப்படும் பெற்றோர்களுக்கான அமானத் வெற்றிக்கிண்ணத்திற்கான கிரிகட் சுற்றுப்போட்டி பேருவளை ஹெட்டிமுல்ல பெர்கோ புட்சல் மைதானத்தில் ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வாக கிண்ண அறிமுகம் இடம்பெற்றது.
8 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதுடன் அன்றைய தினம் 4 ன்கு போட்டிகள் இடம்பெற்ற தோடு ஏனைய போட்டிகள் வார இறுதியில் இடம்பொறும்.
மேற்படி பாடசாலையின் பணிப்பாளரும் பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினருமான டில்சாத் அன்வர், அதிபர் பஸ்லா முர்ஸி் ஆகியோர் தலைமையில் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், பேருவளை பிரதேச சபை தலைவர் பைஸான் நைஸர், பேருவளை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, கொஸ்கொட பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சாமிந்த சில்வா, சீனன் கோட்டை இரத்தினக் கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க முகாமையாளர் மபாஸ் மசூர், கொழும்பு ரிபோன் நிறுவன சந்தைப் படுத்தல் முதாமையாளர் ஸப்ரி ஸவாஹிர், பேருவளை அமானா வங்கி கிளையின் முகாமையாளர் இர்சாத் நஸீல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
போட்டியை கண்டுகளிக்க பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பெருமலவிலானோர் சமூகமளித்திருந்தனர்.
பிலஷ் பெல்கன் அணிக்கு இல்ஹாருல் ஹஸன் ஸுபுகியும், ரெட்வூட் ரொகட் அணிக்கு டாக்டர் மஸ்ஹர் முஹம்மதும், மைட்டி லயன் அணிக்கு ஹனான் நஸ்ருதீனும், த ஒக்வோரியல் அணிக்கு ரிஸ்மின் தாவூதும், தண்டஸ் டைகர்ஸ் அணிக்கு லரீப் தாஹிரும், வைல்ட் டைகர்ஸ் அணிக்கு ரியால் நிஸாமும், பிளக் பெந்தர்ஸ் அணிக்கு பவாஸ் ரிபாயும், ஸில்வர் ஸ்டோர்மஸ் அணிக்கு இர்பான் பாரூக்கும் தலைமை தாங்குகின்றனர்.
இறுதிப்போட்டி பரிசளிப்பு விழாவில் மேலும் பல பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிசியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொள்வர்.





(பேருவளை பீ.எம். முக்தார்)