செப்டம்பர் 16ஆம் திகதி நிந்தவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம் .எச். எம் அஷ்ரப் 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு..!
கொழும்பில் அடுத்த மாதம் செப்டம்பர் 19 ஆம் திகதி தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீனுக்கு பாராட்டு விழா சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அடுத்த மாதம் செப்டம்பர் 16ஆம் திகதி கிழக்கு மகாணத்தில் உள்ள நிந்தவூரில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம் .எச். எம் அஷ்ரப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு , அதைத் தொடர்ந்து கொழும்பில் செப்டம்பர் 19ஆம் திகதி
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் லோட்டஸ் ஹாலில் நடக்கும் ஆகிய மூன்று அரங்குகளாக நடைபெறவுள்ள தமிழக அரசின் 2025 ஆண்டிற்கான “தகைசால் தமிழர்-” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே .எம் காதர் மொகிதீன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இசைமுரசு நாகதர் ஈ. எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு பிறந்த ஆண்டு நிகழ்வு மற்றும் அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வரும் தலைசிறந்த உள்நாட்டு , இந்திய பாடகர்கள் கலந்து கொள்ளும் இஸ்லாமிய கீத நிகழ்வு என்பன பற்றிய ஆலோசனை கூட்டம் கொழும்பில் 21.08.2025 வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை வகித்தார். கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள்
எம்.எஸ். உதுமாலெப்பை,
எம்.எஸ். வாசீத் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த கூட்டத்தில் மூன்று விழாவையும் மகச் சிறப்பாக நடத்துவது என்றும். இந்தியாவில் இருந்து “தகைசால் தமிழர்-” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே .எம் காதர் மொகிதீன் தலைமையில் வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்க வேண்டும் என்றும், இந்த விழாவிற்கு அனைவரையும் சிறப்பான கவுரவிக்க வேண்டு என்று உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மன்சூர் ஏ. காதர்,
முன்னாள் துணை மேயர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், இளைஞர் அணி தேசிய அமைப்பாளர எஸ்.எம்.எம். முஸ்ஸாரஃப், எம். சப்ராஸ், ஏ.சி. சமால்தீன், ஜஸாஉல் முபாரிஸ்,
ஏ.எம். ஜௌபர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் ,மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

