ரணிலின் கைதுக்கு முன் முன்னறிவிப்பு..! யூடியூபரின் செயலுக்கு சஜித் கண்டணம்..!
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற யூடியுபரின் முன்னறிவிப்பை
சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே அவர் தனது எகஸ் தளத்தில்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இதுபோன்ற கருத்துக்கள் தற்செயலாக வௌியிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே யூடியூபர் ஒருவர் அதனை முன்னறிவித்திருக்கிறார்.
அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது அல்லவா?
உண்மையிலேயே திட்டமிட்ட சம்பவம் என்றால், சட்டமும் ஒழுங்கும் போன்ற புனிதமான ஒன்று, மலிவான நாடகமாகி விடுகிறது
என்பது மிகுந்த வருத்தம் தரக்கூடியது” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.