தெஹியங்க ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்..!
கண்டி தெஹியங்க பெண்கள் அமைப்பான DAWA உறுப்பினர்களின் ஏற்பாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த பாடசாலைகளில் கற்பித்து ஓய்வு பெற்ற மற்றும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருந்தகைகளை கௌரவ படுத்தும் நிகழ்வும்,”தீபங்கள் “நூல் வெளியீடும் அண்மையில் அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது.
அல் அஸ்ஹர் பாடசாலை அதிபர் மன்சூர் மபாஹிர் அவர்களின் ஒத்துழைப்போடு,DAWA மகளிர் அமைப்பின் தலைவி ஜென்னா சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கலாநிதி எம். எஸ் .எம் அனஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார் .விசேட அதிதிகளாக கவிஞர் ரவூப் ஹஸீர்,ஊடகவியலாளர் தேசமானிய பாரா தாஹீர்,வித்தியாலய பழைய மாணவர் தேசகீர்த்தி எம். பைஸர்,பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் வஸீர் முக்தார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
தெஹியங்க வரலாற்றில் முதல் முதலாக நடைபெற்றது இவ் நிகழ்வில் தெஹியங்க ஆரம்ப கால கல்வி வரலாறும் ,கலாபூஷணம் அரபா மன்சூர் எழுதிய ஆசிரியர்கள்,அதிபர்களது விபரங்கள் அடங்கிய “தீபங்கள் “நூல் வெளியீடும் இடம் பெற்றதோடு,ரவூப் ஹஸீர் அவர்களின் ஆசிரியர்கள் பற்றி கவிதையும் வாசிக்கப்பட்டது.இங்கு அனைத்து ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்கள்)











