Friday, August 22, 2025
உள்நாடு

கடமைக்குத் திரும்புங்கள்..! இன்றேல் இம் மாத சம்பளம் கிடையாது..! -தபால் மா அதிபர் எச்சரிக்கை..!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்தார். 

இருப்பினும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், தபால் மா அதிபர் ருவான் சத்குமார கருத்து தெரிவிக்கையில்,

“சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *