உலகம்

இந்தியா -அமெரிக்கா வர்த்தக மோதலால் இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி விதிப்பு..!

உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் ஆன வர்த்தக தடை மற்றும் வரி போரை நடத்தி வரும் அமெரிக்கா தற்போதைய நிலையில் இந்தியா முழுமையாக மிகப் பெரிய அளவில் ஆன பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா விடம் இருந்து உலகில் அதிகம் எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் முதன்மை நிலையில் உள்ளது. ஆனால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு எதிராக மிகப் பெரிய அளவில் ஆன வரி விதிப்பை ஏற்படுத்திய நிலையில் இரண்டு நாடுகள் இணையான 143 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மட்டுமே 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து அதிகமாக மருந்து பொருட்கள், ஜவுளிகள், வைரம், ஆபரண நகைகள், செல் போன், மருத்துவ உபகரணங்கள் என்று அதிகமாக ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. சில இந்தியப் பொருட்களின் மீதான புதிய வரிகள், எந்தவொரு அமெரிக்க வர்த்தக கூட்டாளியும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான வரிகளில் ஒன்றாக இருக்கும். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வரிகள் இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரித்தனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிறுத்தப்படவிருந்த முன்னர் அறிவிக்கப்பட்ட 25% வரிக்கு 21 நாட்களுக்குப் பிறகு கூடுதல் 25% வரி அமலுக்கு வரும் என்று அமெரிக்கா ஜனாதிபதியின் உத்தரவு கூறுகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி டஜன் கணக்கான நாடுகளுக்கு அதிகரித்த பரஸ்பர வரிகள் அமலுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜூலை 30 ஆம் தேதி டிரம்ப் தனது சமூக ஊடக செயலியான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் ஆரம்ப 25% வரியை அறிவித்தார். குறிப்பாக அமெரிக்க அதிபர் மிகவும் முக்கியமான இலக்கு இந்தியா என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா உடன் அமெரிக்கா தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்று கூறி வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகிலேயே இந்தியா தான் அதிகம் இறக்குமதி வரிகளைக் போடுவதாக குற்றம் சாட்டினர்.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, அமெரிக்காவை கணிசமாக நம்பியுள்ளது, கடந்த ஆண்டு அதை அதன் சிறந்த வர்த்தக பங்காளியாகக் கருதுகிறது.

இந்தியா வர்த்தகம் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்கள் மொத்தம் $87 பில்லியன் ஆகும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது, அதன் சிறந்த தயாரிப்பு வகைகளில் மருந்துகள் மற்றும் நகைகள் உள்ளன, அதைத் தொடர்ந்து பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ஜவுளி ஆகியவை உள்ளன. தனித்தனியாக, சேவைகள் ஏற்றுமதிகள், முக்கியமாக ஐடி மற்றும் தொழில்முறை சேவைகள், கடந்த ஆண்டு $33 பில்லியன் மதிப்புடையதாக இருந்தன.

இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது.அதற்கு இந்திய மருத்துவ அறிவு அதன் தரத்தை அமெரிக்கா முழுமையாக நம்புகிறது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான மருந்துகளின் மலிவான விலைகள் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது, கடந்த நிதியாண்டில் விற்பனை 16% அதிகரித்து சுமார் $9 பில்லியனை எட்டியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7,60000 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் டஜன் கணக்கான மருந்துகள் மற்றும் பொருட்களில், ஒரு சில வகைப்பாடுகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. அவை வாட்டிங், காஸ் மற்றும் பேண்டேஜ்கள் போன்ற பொருட்கள், புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட ஆன்டினியோபிளாஸ்டிக் மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள்; மற்றும் வலி நிவாரணிகள், ஆண்டிபிரைடிக் மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்ற ஹார்மோன் அல்லாத பிற மருந்துகள் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட தொலைபேசிகளுக்கு சீனாவும் வியட்நாமும் காரணமாக இருந்தபோதிலும், இந்தியாவும் குறிப்பிடத்தக்க பங்கை உற்பத்தி செய்கிறது, மேலும் அமெரிக்கா சந்தையில் உறுதியாகக் காலூன்றத் தோன்றுகிறது.

இதற்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் புதுதில்லியில் உற்பத்தியை மையமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா சீனாவை முந்தியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்ட அமெரிக்க ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் பங்கு 61% இலிருந்து 25% ஆகக் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில்
மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் தொடரும் நிலையில் இந்திய ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அளவு 240% அதிகரித்துள்ளது என்பதை நாம் காண முடிகிறது.

இந்திய ஏற்றுமதி தொடர் வர்த்தகத்தின் மருந்துப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க நுகர்வோருக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் சிறந்த பொருட்களில் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளன. இந்தியாவின் ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதியில் சுமார் 30% அமெரிக்காவிற்குச் செல்கிறது, இது ஆண்டுக்கு சுமார் $10 பில்லியன் வர்த்தகம் எனபது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் இது 1,00000 கோடி ரூபாய் அளவைக் நெருங்கும் என்பது மிகவும் முக்கியமான காரணியாக உள்ளது.

இந்தப் பொருட்களில் பொருத்தப்படாத அல்லது அமைக்கப்படாத வைரங்கள், விலைமதிப்பற்ற உலோக நகைகள் மற்றும் தங்கம் அல்லது வெள்ளியால் பூசப்பட்ட துண்டுகள் போன்ற விலைமதிப்பற்ற உலோகத்தால் மூடப்பட்ட நகைகளையும் இந்தியா அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது.

அமெரிக்கா இந்தியா அமெரிக்கா தயாரிப்பான F35 விமானங்களை வாங்க அழுத்தம் கொடுத்த நிலையில் இந்தியா ராணுவம் மற்றும் ஏரோனடிக் தொழில்நுட்ப பிரிவு முழுமையாக மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்தியாவின் உள்நாட்டு 6 தலைமுறை விமானம்
TEJAS Mk2 திட்டம் நிலைபெற்று விரைவாக முன்னேறி வருகிறது. 2025 இறுதிக்குள் முன்மாதிரி மற்றும் தரை சோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், 2026-இல் முதல் தயாரிப்பு விமானம் விமானப்படையில் இணைக்கப்படும்.

இந்த முன்னேற்றம், பாதுகாப்பு தன்னிறைவு நோக்கில் இந்தியாவின் உயர்வையும், அடுத்த தலைமுறை விமானத் துறையில் நாட்டு தயாரிப்புகளின் வலிமையையும் வெளிக்காட்டுகிறது. ரஷ்ய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானங்களுடன் போட்டியிடும் வகையில் தேஜஸ் Mk2 உருவாகி வருகிறது.

அதேநேரத்தில் 50 சதவீதம் வரி அதிகரிப்பு மூலம் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயலுவதாக சர்வதேச நாளிதழ்களை தவிர்த்து இந்திய நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொருத்தவரை இந்திய சந்தையை குறி வைத்து காய் நகர்த்தி வருவதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்திய உள்நாட்டு சந்தை 600 மில்லியன் மக்கள் வாங்கும் திறன் சமநிலை கொண்ட மிகப்பெரிய அளவிலான ஆன ஒரு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்த சந்தையை போன்று உலகின் வேறெந்த நாட்டிலும் கிடையாது என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்து கொண்ட நிலையில் தான் அழுத்தம் கொடுத்து இந்தியாவை வழிக்கு கொண்டு வர முயலுவதாக இந்தியா அறிவு சார் தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா இந்திய சந்தையில் அமெரிக்கா விவசாய உபகரணங்கள், பால் பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் 60 கோடி விவசாயிகள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் அமெரிக்காவுக்கு சந்தையை திறந்து விட இந்தியா மறுத்து வருகிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 800 மில்லியன் பேர் பால் வர்த்தகத்தில் ஈடுபடும் சூழலில் அமெரிக்கா பால் பொருட்கள் வர்த்தகத்தை இந்தியாவில் சந்தைப்படுத்த முயலுகிறது. ஆகவே தான் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் போரின் மூலம் உக்ரைனில் மக்களை கொல்லும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

அதேபோல் ரஷ்யா விடம் இருந்து 40 சதவீதம் அளவிற்கு அதிகமாக பெட்ரோல், டீசல், குரூட் ஆயில் இறக்குமதி செய்து வருகிறது.இதன் மதிப்பு கிட்டத்தட்ட 5,50000 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் பெரும்பாலான ராணுவம் சார்ந்த கூட்டு தயாரிப்புகளை இந்தியா மேம்படுத்தி வருவதைக் தடுக்கவும் அமெரிக்கா வரி உயர்வை இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்றாக மாற்றி வருகிறது. தற்போதைய நிலையில் பாகிஸ்தான், இந்தியா இடையேயான போரில் நான் தான் சமாதானம் ஏற்படுத்தி வைத்தேன் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில் இதன் மூல கருப்பொருளாக வியாபாரம் உத்தி ஒன்றே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதே உண்மையாகும்……!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *