சுமார் இரண்டு லட்சம் தொண்டர்களின் பங்கேற்புடன் மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது மாநில மாநாடு..!
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் 2வது மாநில மாநாடு வியாழக்கிழமை கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். வியாழக்கிவமை மாலை 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் ககொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மாநாட்டுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் தொண்டர்கள் புதன்க்கிழமை இரவு இருந்து இடம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெற்றது.
சென்னையில் இருந்து புதன்கிழமை மாலை கார் மூலம் மதுரை வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் , மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே ஓட்டலில் தங்கினார். புதன்கிழமை காலை மதுரை வந்த அவரது பெற்றோர் ஷோபா, சந்திரசேகர் மாநாட்டு திடலை பார்வையிட்டனர். வியாழக்கிழமை மதியம் 3:45 மணிக்கு முதல் நிகழ்வாக கட்சி கொடியேற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி எடுத்தார்கள், கொள்கைப்பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விஜய் மேடையில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கில் தொண்டர்களை நோக்கி கையை அசைத்தபடி சென்றார். அப்போது, தொண்டர்கள் கட்சித் துண்டை விஜய்யை நோக்கி வீசி எறிந்தனர். அதை ஒன்றை எடுத்து கழுத்தில் விஜய் அணிந்து கொண்டார். விஜய்யை, மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த அவரது தந்தை சந்திரசேகர் கட்டியணைத்து வரவேற்றார்.மேடையில் இருந்த நிர்வாகிகள் விஜய்யை கைகுலுக்கி வரவேற்றனர்.
மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
தவெக 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. ‘பெரியாரின் பேரன்’ என்ற பின்னணி வரிகள் முழங்க பெரும் ஆரவாரத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப் வாக்’ நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது தொண்டர்கள் கொடுத்த கட்சித் துண்டுகளை பெற்று தோளில் அணிந்து கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலித்தது.
மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரும்பாலான நபர்கள் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.பாரபத்தியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக வாகனங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அதேபோல், தவெகவுக்காக, விஜய்க்காக வித்தியாசமான முறையில் மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்சியிலிருந்து வந்த ஒரு தவெக தொண்டர் சிறிய சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து கவனம் ஈர்த்தார்
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)





