உள்நாடு

“இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வரலாறு காணாத அடைவினை ஏற்படுத்தியுள்ளேன்..!” -சுங்க பணிப்பாளர் நோனிஸுடன் நேர்காணல்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. நோனிஸ் அவர்களுடன் ஓர் நேரடி சந்திப்பு நேற்று 21 சுங்கத் திணைக்களத்தின் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

கே. உங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு பணிப்பாளர் நாயகமாக நியமித்திருந்தார்கள். தற்போதைய ஜனாதிபதியும் உங்களை தொடர்ச்சியாக வைத்திருப்பது ஏன் ?

நான் அரசியலுக்கு அப்பால் ஓர் இலங்கை அரசாங்க நிர்வாக அதிகாரி….நான் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சில் 4 வருடங்கள் மேலதிகச் செயலாளர் கடமையாற்றிய நான் ஓர் அமைச்சின் செயலாளர் வருவதை விட்டு இந்த சுங்கத் திணைக்களத்தின் நிமிர்த்தி அதனை ஓர் சிறந்த அரச நிறுவனம் மாற்றுவதற்கே அதனை என்னிடம் ஒப்படைத்தார்கள்
அந்தக் கடமையை தனது மனசாட்சியின் படி இந்தப் பணியை வரச் சரியாக செய்துள்ளேன்.

வரலாற்றில் எந்த ஒரு பணிப்பாளரும் காணாத அடைவினை சுங்கத்திணைகக்ளத்தில் ஏற்படுத்தியுள்ளேன்.

கடந்த 3 வருடங்களாக நான் இத் திணைக்களத்தின் பாரிய இலாபமீட்டி இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்கள் வரிப்பணத்தை ஒழுங்கான முறையில் இட்டுச் சென்றுள்ளேன். எனது அடைவினை ஜ.எம்.எப் அதிகாரிகள் கூட பாரட்டினார்கள்.

நான் இம்மாதம் 25 ஆம் திகதி 60 வயதினை அடைகின்றேன். நான் கௌரவமான முறையில் இக் கதிரையை விட்டு ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளேன். எனக்கு அடுத்து இருக்கும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் அருட்கொடையிடும் பாரம் கொடுத்துச் செல்வேன் அவரும் ஓர் சிறந்த அதிகாரி

எனது மனசாட்சிக்கு அமைவாக எனது தந்தை ஓர் கந்தானை பிரதேசத்தில் வாழும் ஓர் சாதாரண மீனவர் அவர் எனக்கு கற்றுத் தந்த பாடத்தையே நான் இன்றும் நினைத்து எனது கடமையைச் செய்கின்றேன்..

..நான் காலை நாளாந்தம் அலுவலகம் வரும்போது கந்தானை ,கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆராதனையில் ஈடுபட்டுத் தான் எனது கடமையை தெய்வ சாட்சிக்கு அமைவாக உரியவாறு செய்கின்றேன். அவன் என்னை அவதானித்துக் கொண்டு இருக்கின்றான். நான் சம்பாதிக்கவில்லை. எனக்கு கிடைக்கும் அரச மாத சம்பளம் எனக்கு போதுமானது எனது இரண்டு பிள்ளைகளையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி எனதும் எனது மனைவி ஜ.ரீ.என் தொலைக்காட்சியில் கடமையாற்றுகின்றார் எங்களது ்சம்பளத்தில் எங்களைப்போன்று எனது பிள்ளைகளும் வருவதற்கு கல்விக்கு உதவி செய்கின்றோம்.

நாம் பெறும் சம்பளம் பொது மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அதனைவிட மேலதிகமாக அரச பணத்தினை நாம் கொள்ளையடிப்பேமேயானல் – இந்த நாட்டில் சாதாரண ஏழை மக்கள் மருந்து இல்லாமல் இறக்கின்றார்கள் அவ்வாறன மக்களின் சாபம் எம்மை சும்மா விடாது.

நான் நாளை இந்த கதிரையில் இருந்து வெளியே போகும்போது தனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்துள்ளேன்..என எனது மனசாட்சி சொல்கின்றது

.எனது வாகனத்தினைக் கூட நான் பொறுப்பளித்துவிட்டு நான் நாளை பஸ்ஸில் ஏறி வீடு செல்வேன்…… நான் சுங்கத்திணைக்களத்தில் ஓர் ஒழுங்கான பொறிமுறையை இலாபம் டாக்கற் டிஜிட்டல் முறையை அடைவினை வகுத்துச் செல்கிறேன்.
அதனை எதிர் காலத்தில் இந்தக் கரையில் உட்காரும் எந்த பணிப்பாளர் நாயகம் அந்த முறையை எவ்வித பிரச்சினையுமின்றி முன்னெடுக்க முடியும்..

…..கடந்த காலங்களை விட 2023,24.2025 என 3 ஆண்டுகள் வரலாறு காணாத இலாபத்தினை இலங்கை சுங்கத்திணைக்களம் அடைந்துள்ளது

சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு 50 வீதம் விருதுப் பணம் வழங்கப்படுகிறது. அவர்கள் இரவு பகலாக தொழில் செய்கின்றனர். அவர்கள் வேறு வழியில் பணம் சம்பாதிக்காது 6 மாத சம்பளத்தை போனஸாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் . இவ்வருடம் 2025 ஜூலை 31 வரை வரலாறு காணாத முறையில் 12, 593 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுள்ளோம்..

..அதற்கு என்னிடம் சிறந்த சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் பிரதிப் பணிப்பாளர்கள் கொண்ட குழாம் உள்ளனர்.

மேலும் 400 வெற்றிடங்கள் சுங்கத் திணைக்களத்தின் நிலவுகின்றன.

அரசன் பணத்தினையும் தெய்வத்தின் பணத்தினையும் நாம் ஒருபோதும் களவாடி வீட்டுக்கு கொண்டு போக வேண்டாம் . தெய்வம் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என எனது தந்தை எனக்கு அடிக்கடி சொல்வார்

அத்துடன் எனது உடன் பிறந்த சகோதரர் மொரட்டுவை கிறிஸ்தவ ஆலயத்தில் பாரதியார் உள்ளார் ஆகவே நாங்கள் நேர்மையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

எனது அறிவும் ஆழ்மையும் அனுபவமும் இந்த நாட்டின் , புதிய திட்டங்களையும் வகுத்துள்ளேன்… நான் எந்த வித அரசியலுக்கும் அடி பனியேன் அதற்காகவே என்னைப் பற்றி தற்போதைய ஜனாதிபதி என்னையே தொடர்ந்து சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தொடருமாறு பணித்தார்.நான் இந்த நாட்டுக்காகவும் வரி செலுத்தும் அப்பாவி மக்களுக்காகவும் என்னை அர்ப்பனித்துள்ளேன்………என பதில் அளித்தார் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *