உதயம் ஆசிரிய பீட உறுப்பினர் அரபாத்தின் மாமனார் காலமானார்..!
எமது ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த கற்பிட்டி அரபாத்தின் மாமனார் (மனைவியின் தந்தை) மினுவாங்கொடையைச் சேர்ந்த அல்ஹாஜ் சல்மான் காலமானார். அன்னார் மர்ஹும் அப்துர் ரஹ்மான்,றஹ்மத்தும்மா ஆகியோரின் அன்புப் புதல்வரும்,ஹாஜியானி பிக்ரியாவின் அன்புக் கணவரும்,ஆசிரியை சஹானா,சாபித் ஆகியோரின் தந்தையும்,கற்பிட்டி அரபாத்தின் மாமனாரும்,நஜாத்,ரபாய், ஹக் ஆகியோரின் சகோதரரும்,ஹாரிஸ்,சீராஸ்,பயாஸ்,நிசாப்,அஸ்லம் ஆகியோரின் மைத்துனரும்,அலீனாவின் அப்பாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு இஷாத் தொழுகையின் பின்னர் மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.