உள்நாடு

ஏற்றுமதி வியாபாரத்தை நோக்கி நகர இளம் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.வட மத்திய மாகாண ஆளுநர்

நமது உள்ளூர் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஏற்றுமதி விவசாயத்தை நோக்கி வேகமாக நகர  அதற்காக இளம் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தெரிவித்தார்.

கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் சியம்பலங்கமுவ பகுதியில் விவசாயிகளின் கறி மிளகாய் செயற்திட்டத்தை ஆய்வு செய்யும் நோக்கில் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே  ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்:- நமது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உள்ளூர் உற்பத்தி பொருட்களை மையமாக கொண்டு பண்ணை பொருட்களை வழங்குதோடு மட்டுமல்லாமல் பல்பொருள் அங்காடிகளுக்கு உங்கள் உற்பத்திகளை  விநியோகம் செய்ய தேவையான ஆதரவையும் வழங்க முடியும். இன்றைய இளம் விவசாயிகள் தங்களின் ஆற்றலையும் புதிய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் இலக்கை அடைய முடியும். இந்த இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் 

இங்கு  விவசாய இளைஞர்கள் குழுவினர் கருத்து தெரிவிக்கையில்:- நாம் அரசாங்கத்திடம்  எதனையும் எதிர் பார்க்கவில்லை .  எங்கள் கிராமத்திலுள்ள  உற்பத்தி  பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியான வீதிகள் இல்லை . அவைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.அவைகளை அபிவிருத்தி செய்து தருமாறும் விவசாய பண்ணை களைச் சூழ மின்சார இணைப்புக்களை பெற்று தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் காமினி சேனாரத்ன ஆளுநரின் இணைப்பு செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *