உள்நாடு

சிறப்பு பெறுபேற்று மாணவர்களின் ஜனாதிபதி நிதிய பாராட்டு விழா இரத்தினபுரியில் 23 ஆம் திகதி

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல் வி பொதுத்தராத உயர்தர பரீட்சை யில் 3A சித்தி பெற்று திறமையாக சித்தி அடைந்த சாதனை மாணவர் களை பாராட்டும் சப்ரகமுவ மாகாண நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ளது

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை சேர்ந்த இவர்களில் ஒரு மாவட்டத்தில் இருந்து உயர்தரத்தின் ஆறு பிரிவுகளிலும் இருந்து தலா 10 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 120 மாணவர்கள் இங்கு பாராட்டி பரிசளித்து கெளரவிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

வருகை தரும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பொருத்தமான சீருடையுடன் தாய் அல்லது தந்தையுடன் மட்டும் வந்து ஆசனங்களில் அமருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *