காத்தான்குடியில் ஹர்த்தால் இல்லை. அனைத்தும் வழமை போல்
வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சியினால் ஹர்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடியில் வழமை போன்று இன்று திங்கட்கிழமை (18) வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாடசாலைகள் , வங்கிகள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-எம்.பஹத் ஜுனைட்-
(காத்தான்குடி செய்தியாளர்