அம்பாரை மாவட்டத்தில் உலக வங்கியின் சமுக வலுவூட்டும் திட்டத்தின் பயனாளிகளை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் 2025.08.15,16,17 ம் திகதிகளில் நடைபெற்றது. அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கான சிறப்பு கண்காணிப்பு விஜயம் இன்று நடத்தப்பட்டது.
இவ் விஜயத்தில் சமுர்த்தி திணைக்கள அதிகாரிகளும்,உலக வங்கியின் பிரதி நிதிகள் மற்றும் மாவட்ட சமுர்த்தி அலுவலக அதிகாரிகளும் பங்கேற்று, தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டதுடன்
இத்திட்டங்களை பயனாளர்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாகவும், செயல்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குதேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் விஜயத்தின் போது வழங்கப்பட்டன.



(இஸட் ஏ.ஏ.றஹ்மான்)