பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்
வர்த்தக வணிக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த (15) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உற்பத்தி கூட்டுறவு துறைகளை ஆரம்பிக்கும் திட்டம் குறித்து அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பொறுப்புகள் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
அங்கு நுகர்வோர் அதிகாரசபை மற்றும் எடைகள் அளவிடுதள் திணைக்களம் தொடர்பான பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.அதன்படி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நெல் இருப்புக்களை பெரிய அளவிலான ஆலைகளுக்கு விற்கப்படும் போது எடை போடுதல் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் வெளிப்பாட்டுத்தன்மை இல்லாதது குறித்து எவ்வாறு தலையிடுவது என்பது பற்றியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் பொட்டல அரிசிப் பைகளின் சரியான எடையை சரிபார்க்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் எழுந்த உரக்கலவை தெடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மாவட்டத்தில் நஷ்டத்தில் இயங்கும் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றால் நடாத்தப்படும் பல்வேறு நிறுவனங்களின் சேவைகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.





(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)