உள்நாடு

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் 

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது. 

இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *