உள்நாடு

உடப்பூரில் விருது வழங்கும் விழா

உடப்பு அருள் நாகநாதன் அறக்கட்டளையும், உடப்பு இளம் தாரகை அமைப்பும் இணைந்து
உடப்பூரின் உயர் கல்வியை செழித்தோங்கச் செய்ய வேண்டும் என்ற நன் நோக்கத்தோடு ஏற்பாடு செய்த பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர்கள், பல்கலைக்கழகத்தில் உயர் கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு இதன் போது கௌரவ விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு அண்மையிலே உடப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

கலாநிதி அருள் நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விலே முதன்மை விருந்தினர்களாக உடப்பு இந்து ஆலய பரிபாலன சபை தலைவர் வை. கந்தசாமி முத்து, உடப்பு இந்து ஆலய பரிபாலன சபை பொருளாளர் க. சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக உடப்பு தமிழ் மகா வித்தியாலய அதிபர் பூ.சுகந்தன், ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்ப பாடசாலை அதிபர் கோகுல காந்தன், குசலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் க. நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடப்பு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தேவாரம் பாடி நிகழ்வை ஆரம்பிக்க வரவேற்புரையையும், வாழ்த்துரையையும் எழுத்தாளர் உடப்பூர் வீரசொக்கன் வழங்கினார். சிறப்புரைகளை “கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் வகிபாகம்” எனும் தலைப்பில் உடப்பு தமிழ் மகா வித்தியாலய அதிபர் பூ.சுகந்தன், உடப்பு தமிழ் மகா வித்தியாலய பிரதி அதிபர் சோமாஸ் அருட்குமரன் ஆகியோரும், நன்றியுரையை ஆர். ஸ்ரீ ரங்கநாதனும் நிகழ்த்தினர்.

ந.ஜர்சிகர், வீ.பிரவீன், ப.யக்ஷிஹன், இரா.சதுர்ஷா, சி.விந்தியா, சி.அபிலக்ஷா, சு.ஜோபிகா,
வீ.ரூபதிலகன், கோ.கிருபாஹரணி, ச.சங்கவி, சு.கேதுஷனா,
க.மதுஷாலினி, மு.கேஷித் ஆகியோரே இதன் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பொறியியல் துறையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பதக்கங்கள் சூடி, விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏனைய பட்டதாரி மாணவர்கள் பொற்கிழி, விருது மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *