சிரேஷ்ட ஊடகவியலாளார் பூவி றஹ்மத்துல்லாஹ்வின் மறைவு காத்தான்குடி ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாகும்; காத்தான்குடி மீடியா போரம் அனுதாபம்
காத்தான்குடி ஊடக சமூகத்தில் துணிச்சலாகவும், தைரியமாகவும் ஊடகப்பணியாற்றியவர் மர்ஹூம் பூவி றஹ்மத்துல்லாஹ்.
‘வார உரைகள்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராக மட்டுமல்லாது தனி நபராக நின்று ஊடகவியலாளராக களப்பணியாற்றிவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அன்னாரது மறைவு குறித்து காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மற்றும் தேசிய ஊடகத்தினரும் கவலையடைகின்றனர்.
பல்வேறு ஊடக அமைப்புகளில் இணைந்து செயலாற்றிய இவர் காத்தான்குடி மீடியா போரத்திலும் சில காலங்கள் அங்கத்தவராகவும் செயற்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது மறுமை வாழ்வை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு மேலான ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் சுவனத்தை வழங்குவானாக! என பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் காத்தான்குடி மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவ் அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
