பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்..!
புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.
பொலிஸ் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது சரியான சேவையை வழங்கவில்லை என்றாலோ 0718598888 குறித்த வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகள் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.