பல இடங்களில் மழை பெய்யலாம்..!
சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீட்டருக்கும் கூடிய வேகத்தில் காற்று வீசக்கூடும். இச் சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை காணப்படும்.
எனவே முடியுமானவரை மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.