பணிப் புறக்கணிப்பு எதிரொலி.இரத்துச் செய்யப்பட்டது தபால் ஊழியர்களின் விடுமுறை.

இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர், மேலதிக கொடுப்பனவு, கைவிரல் அடையாள இயந்திர பதிவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மாலை 4 மணி முதல் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.