ஒலுவிலில் நீண்டகாலம் சேதமடைந்திருந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் தொடராக, ஒலுவில் – 04 ஆம் பிரிவு மகாபொல வீதியின் அபிவிருத்திப் பணிகளை அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நேற்று (15) ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில், கிராமிய உட்கட்டமைப்பு சமூக பாதுகாப்பு பிரதி அமைச்சரின் இணைப்பாளர் சுல்தான் சத்தார், உதவி பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)