உலகம்

உக்ரைனில் அமைதி திரும்பும்..! டிரம்ப்,புடின் அலாஸ்கா பேச்சின் பின் நம்பிக்கை..!

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார்.

அதன் பிரகாரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் கூட்டு இராணுவ தளத்தில் நடைபெற்றது. இங்கு புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை ட்ரம்ப் அளித்தார். இங்கு இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

பின்னர் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது:

எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நானும், ட்ரம்பும் வெளிப்படையாக பேசினோம். ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

ட்ரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறியதற்கு உடன்படுகிறேன். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

இரு தலைவர்களும் “பல புள்ளிகளில்” உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தாலும், உறுதியான ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்: ஒரு முக்கியமான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. விரைவில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசி வழியாகப் பேச உள்ளேள்ன. எதிர்காலத்தில் ஜெலென்ஸ்கியை உள்ளடக்கிய முத்தரப்பு சந்திப்பு நடைபெறலாம் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *