அகில இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக புத்தளம் ரணீஸ் பதூர்தீன் தெரிவு..!
அகில இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளராக புத்தளம் மாநகர சபை உறுப்பினரும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான ரணீஸ் பதூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட உப்பு தொழிலில் அனுபவம் கொண்ட இவர் நாடு தழுவிய அகில இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பல பெரும்பான்மை நிறுவனங்களின் உரிமையாளர்களும் , அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்ற மேற்படி சங்கத்திலே இவர் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை புத்தளத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)