இந்திய 79 வது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில்
இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று (15) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் (இந்திய இல்லம்) உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி, இந்திய தேசிய இராணுவத்தின் தியாகங்களை நினைவுகூர்ந்து கொழும்பிலுள்ள IPKF நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில், ஜனாதிபதியின் சுதந்திர தின முன்னோடி உரையின் பகுதிகளை உயர்ஸ்தானிகர் வாசித்தார். சுவாமி விவேகானந்தர் கலாசார மையத்தின் மாணவர்கள் தேசபக்தி நிகழ்ச்சிகளை வழங்கினர். இலங்கை கடற்படை இசைக் குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைத்து நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.
யாழ்ப்பாணம், கண்டி, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாக்கள் நடைபெற்றன. “விக்சித் பாரத்” (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பை மீளவலியுறுத்தி, பெருமையுடன் இலங்கையிலுள்ள இந்தியப் புலம்பெயர் சமூகம் இந்நிகழ்வில் பங்கேற்றது.