நிருவாக உத்தியோகத்தர் விஸ்றுல் வஜிதா அரச சேவையிலிருந்து ஓய்வு..!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றிய மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா 32 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றி கல்முனை பிராந்திய சுகாதாரத்துறைக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக பிராந்திய பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைநலன் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிருவாக உத்தியோகத்தர் விஸ்றுல் வஜிதா தனது சேவைக்காலத்தில் பொறுப்புணர்வுடன், பொதுமக்களினதும் தனது அலுவலகத்தின் கீழ் பணியாற்றிய உத்தியோகத்தர்களினதும் நலனை முதன்மையாகக் கொண்டு மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவராவார்.
கல்முனை பிராந்திய சுகாதாரத்துறைக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உட்பட பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் குறித்த தினம் அவர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(றியாஸ் ஆதம்)


