கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக ஆராய பிரதியமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் கள விஜயம்
கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக ஆராய்வதற்கு கல்முனை கடற்கரை பிரதேசங்களுக்கு சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, தற்போதுள்ள நிலைமைகள் சம்பந்தமாக கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, கடலரிப்புக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்னாயக்க உட்பட கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






(எம்.எஸ்.எம்.ஸாகிர்)