2025 ல் ஹஜ் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை..! ஹஜ் முகவர் சங்கத் தலைவர் கரீம்..!
2025 ஆம் ஆண்டில் ஹஜ் சென்ற இலங்கை ஹாஜிகள் இலங்கை முகவர்கள் பற்றி எவ்வித முறைப்பாடுகளும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்களுக்கு பதிவாகவில்லை. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஹஜ் பற்றி சவுதி அரசாங்கம் மேலதிக கட்டுப்பாடுகளை இட்டுள்ளது. ஏற்கனவே ஹஜ் பனித் திட்டத்தை தொடங்கியுள்ளது ஹஜ் 2026க்கான ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கவே இப் பத்திரிகையாளர் மாநாட்டில் நடத்துகின்றோம்.
என ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சி.பி.என் கரீம் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஹஜ் யாத்திரிகை கான ஏற்பாடுகள் குறித்து இலங்கை ஹஜ் சுற்றுலா முகவர்கள் சங்கம் இன்று 13ஆம் திகதி மருதானையில் உள்ள ஹஜ் முகவர்கள் சங்கத்தில் நடாத்திய ஊடக மாநாட்டில் அதன் தலைவர் ஏ.சி.பி.என் கரீம், செயலாளர் சப்றாஸ் சமூன் மற்றும் பொருளாளர் புவாத் ஜெமீல், உறுப்பிணர்கள் நைசர் ரசீட் ஆகியோர்கள் சமுகமளித்திருந்தனர்
அவர் தொடர்ந்து தகவல் தருகையில் –
சவுதி அரேபியா அரசாங்கம் மினாவில் மண்டலங்களை தேர்ந்தெடுத்து பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை சேவை வழங்குநர்கள் நியமிப்பதற்கான ஏற்பாடுகள் ஆகஸ்ட் 23 2025 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் முடிக்குமாறு இலங்கை ஹஜ் மிஷனுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது மினாவில் நியமிக்கப்பட்ட மண்டலங்கள் (சூம்) மற்றும் கூடாரங்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும்.
ஆகஸ்ட் 23 2025க்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் மாற்றப்பட வேண்டும் உதாரணமாக ஒரு ஹஜி 9 இலட்டசம் ருபாவது முன் கூட்டி செலுத்தி வைத்தல் வேண்டும். ஹஜ் ஆபரேட்டர்கள் மக்கா மற்றும் மதீனா இரண்டிலும் ஹோட்டல் முன்பதிவுகளை உறுதி செய்து ஹஜ் திட்டத்திற்கான போக்குவரத்து சேவைகள் முன்பதிவு செய்ய வேண்டும். என அறிவுறுத்தியுள்ளது.
முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறை இன்னும் 2026 ஆம் ஆண்டிற்கான எந்த ஹஜ் ஆப்ரேட்டர் களையும் தேர்ந்தெடுக்கவில்லை அல்லது உரிமம் வழங்கவில்லை அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் ஊடகங்களில் வெளியிடப்படும்.
2026 ஆம் ஆண்டில் ஹஜ் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர் மற்றும் பிற தேவையான விவரங்களை முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் வலைத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். 0112 669997 அல்லது 0112 667907 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது முஸ்லிம் சமய திணைக்களத்தின் வெப் தளத்திற்குச் சென்று 5000 ரூபாவினை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து யாத்திரிகள் தங்களது சொந்த வங்கிக் கணக்கில் ரூ. 900,000 ஆரம்பத் தொகையை டெபாசிட் செய்து ஓர் ஹஜ் முகவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதை தயாராக வைத்திருக்கும் திணைக்களத்தினால் தெரிவிக்கப்படும். இவ்விடயம் பற்றி தகவல்கள் அல்லது உதவிகளுக்கு முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் தொடர்பு கொள்ளவும்.
(அஷ்ரப் ஏ சமத்)



