மகாஇலுப்பல்லம விபத்தில் அறுவர் காயம்
தலாவ _ கெக்கிராவ வீதியில் மகாஇலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து (12) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வேன் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி பின்னர் வீடொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த 06 பேர் காயமடந்த நிலையில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)