பலஸ்தீனை ஆதரித்து கொழும்பில் 15 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்
பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை எதிர்த்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் பிரமாண்டமான ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலஸ்தீன் ஆதரவு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆரப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. சில தினங்களுக்கு முன் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மலேஷிய ஆதரவுடனான இயக்கம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அரசியல் கட்சிகள், பலஸ்தீன் ஆதரவு அமைப்புகள்,சமய இயக்கங்கள் உட்பட மேலும் பல அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளன.
மலேசியா ,காஸா ஸிந்தா என்ற அமைப்பு அண்மையில்கொழும்பில் கூடி இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவு அமைப்புகளை ஒற்றுமைப் படுத்தும் கூட்டமொன்றினை நடாத்தின. அதன்போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மலேஷியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின ஆதரவுடன் இந்த இயக்கம் செயற்பட்டு வருகிறது.