உள்நாடு

கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி நினைவேந்தல் நிகழ்வு..!

அண்மையில் எம்மைவிட்டும் பிரிந்த எமது ஸ்தாபக உறுப் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனிக்கான நினைவேந்தல் நிகழ்வு
16/08/2025 சனிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் வலம்புரி கவிதா வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது.

வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில்  தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், இலங்கைக்கான முன்னாள் உயர் ஸ்தானிகரும்,  வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான இப்ராஹிம் அன்சார், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன்,  வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்,  தமிழன் பிரதம ஆசிரியர் சிவா ராமசாமி, விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ், ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன், தினகரன் துணை ஆசிரியர் கே. ஈஸ்வரலிங்கம் ஆகியோருடன் இன்னும் பலர் பங்கேற்று நாகூர்கனி பற்றிய நினைவுக் குறிப்புகளை முன்வைப்பர். குடும்ப சார்பில் டொக்டர் ருஸைக்கா நாகூர்கனியும், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *