இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்..!
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி டி.என். மஜீத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் இராணுவத்தின் ரணசேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட ஒரு அதிகாரியாவார். அத்துடன் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் அப்போதைக்கு பிரிகேடியர் தரத்தில் இருந்த இவர் இராணுவத்தின் உளவியல் செயற்பாட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தின் புதிய புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மஜீத், கடந்த ஆறாம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.