விளையாட்டு

பராஇமுல் ஈமான் பிரீமியர் லீக் (BIPL) – வெள்ளி விழாவை முன்னிட்டு கிரிக்கெட் பெருவிழா

2000ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 25 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தாருல் குர்ஆன் லிபாரா இமில் ஈமான் (DQLI) நிறுவனம், அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, பராஇமுல் ஈமான் பிரீமியர் லீக் (BIPL) – வெள்ளி விழா கிரிக்கெட் பெருவிழாவை சிறப்பாக நடத்தியது.
இப்போட்டியில், DQLI-யின் நான்கு கிளைகளின் ஆசிரியர்கள்,மாணவர்கள், நலன் விரும்பிகள் என இணைந்து டார்க் வாரியர்ஸ் (ஊதா), ஷாடோ ஸ்ட்ரைக்கர்ஸ் (பச்சை), தண்டர் யார்க்கர்ஸ் (இளஞ்சிவப்பு) மற்றும் ஃபையர் ஃப்ளிக்கர்ஸ் (மஞ்சள்) ஆகிய நான்கு அணிகள் உற்சாகமாகப் பங்கேற்றன.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை NAAS கலாசார நிலையத்தில் நடைபெற்ற ஜெர்ஸி மற்றும் கோப்பை அறிமுகம் நிகழ்வில், பல சிறப்பு விருந்தினர்கள், , மாணவர் மற்றும் ஆசிரியர் அணிவீரர்கள் கலந்து கொண்டு, வீரர்களுக்கு உத்தியோக பூர்வமாக ஜெர்ஸிகள் வழங்கப்பட்டன. வெற்றி கோப்பை வெளியிடப்பட்டு, போட்டி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி காலை 7.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அபயபுர கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ரவுண்ட் ராபின் லீக் முறையில் ஒவ்வொரு அணி மற்ற அணிகளுடன் மோதியது. போட்டிகள் முழுவதும் வீரர்கள் நல்ல விளையாட்டு உணர்வு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தினர்.
லீக் சுற்றில் அதிக புள்ளிகளை பெற்ற அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப்போட்டியில்
மாணவர் அணி சார்பாக டார்க் வாரியர்ஸ் (கொத்தடுவை) அணி தண்டர் யார்க்கர்ஸ் (தெமடகொட) அணியை எதிர்கொண்டது.
ஆசிரியர் பிரிவு இறுதியில் டார்க் வாரியர்ஸ் அணி ஷாடோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இரு பிரிவுகளிலும் அபாரமாக விளையாடி
இறுதிப் போட்டியில் இறுதி ஓவரில் டார்க் வாரியர்ஸ் அண வெற்றி வாகை சூடியது. தண்டர் யார்க்கர்ஸ் (இளையோர்) மற்றும் ஷாடோ ஸ்ட்ரைக்கர்ஸ் (மூத்தோர்) அணிகள் ரன்னர்அப் விருதை பெற்றன.

சிறப்பு விருதுகள்:

ஆசிரியர் பிரிவு

சிறந்த துடுப்பாட்டக்காரர் – முஹம்மது பஷீர் (டார்க் வாரியர்ஸ்)

சிறந்த பந்து வீச்சாளர் – பிலால் தாரிப் (டார்க் வாரியர்ஸ்)

சிறந்த பீல்டர் – ஹசன் (டார்க் வாரியர்ஸ்)

போட்டித் தொடரின் சிறந்த வீரர் – முஹம்மது பஷீர் (டார்க் வாரியர்ஸ்)

மாணவர் பிரிவு

சிறந்த துடுப்பாட்டக்காரர் – அகமது பாஹ்மி (டார்க் வாரியர்ஸ்)

சிறந்த பந்து வீச்சாளர் – பாசித் (ஷாடோ ஸ்ட்ரைக்கர்ஸ்)

போட்டித் தொடரின் சிறந்த வீரர் – அகமது பாஹ்மி (டார்க் வாரியர்ஸ்)

ஒட்டுமொத்த விருதுகள்

சிறந்த கேப்டன் – முக்ரம் (ஷாடோ ஸ்ட்ரைக்கர்ஸ்)

நேர்மையான விளையாட்டு விருது – தண்டர் யார்க்கர்ஸ் (கேப்டன்: பார்வீஸ்)

NAAS நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் நஜ்மான் ஸாஹித் அவர்கள் தன் பெருமதிப்பிற்குரிய வருகையால் இந்நிகழ்வை சிறப்பித்தார்.

மாலை 5.30 மணிக்கு நிறைவு விழா நடைபெற்று, அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது.
தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான் மத்ரஸாவின் 25 வது வருட பூர்த்தி விழாவை சிறப்பிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை மேலும் வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டி நிகழ்ச்சி அல்லாஹ்வின் உதவியுடன் மாலை 6:00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது

BIPL வெள்ளி விழா கிரிக்கெட் பெருவிழாவை சிறப்பாக நடத்தமுயன்ற அனைத்து விருந்தினர்கள், வீரர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் DQLI தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *