சமட்ட நிவஹன திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு காசோலைகள்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ” சமட்ட நிவஹன ” வீட்டு உதவித் திட்டத்துடன் இணைந்து அனுராதபுரம் மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு உதவி காசோலை வழங்கும் நிகழ்வு வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த வீட்டு வசதி உதவித் திட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வின் வழிகாட்டுதலின் கீழ் நகர அபிவிருத்தி கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக வின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுராதபுரம் மாநகர சபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் வடமத்திய மாகாண சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)