பிட்டவளை ஸாவியாவில் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்
தென்னிந்தியா, முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஆத்மீக ஞானி மர்ஹ{ம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹம்மது லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்த கத்தமுல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் பேருவளை சீனன்கோட்டை பிட்டவளை சாதுலியா ஸாவியாவில் 10.08.2025 மாலை கலீபத்துஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.எம்.எம் செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது.
சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) விஷேட சொற்பொழிவாற்றினார்.


(பேருவளை பீ.எம். முக்தார்)