ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம்..! மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல்..!
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.