துருக்கி நில நடுக்கத்தில் ஒருவர் பலி; பலர் காயம்
துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந் நிலநடுக்கத்தினால், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவர் மீட்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.