ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் பலகத்துறையில்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும் நீர்கொழும்பு கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளின் 100 மாணவர்களுக்கான AI தொழில்நுட்பத்துடனான ஒரு நாள் ஊடகத்துறை பயிற்சிப்பட்டறையும் எதிர்வரும் 17-08-2025 காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீர்கொழும்பு ‘அல்பலாஹ்’ கல்லூரியில் நடைபெறும்
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரமும் பலகத்துறை கலை இலக்கிய வட்டமும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றன.
அதற்கான துரித ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அவசர கலந்துரையாடலொன்று பலகத்துறை கடலோர “க(G)பானா” ஹோட்டலில் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.ஜே.எம்.தாஜுதீன் தலைமையில் கடந்த நோன்மதி தினம் இரவு நடந்தேறியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும்,கம்பஹா மாவட்ட போரத்தின் தலைவருமான கலாபூஷணம் எம்.எம். நிலாம் நானாவும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.



