செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி ஐ.நா சபையில் உரை..! ஜப்பானுக்கும் விஜயம்..!
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் , ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளார். செப்டம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா.மாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். செப்டம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். இதே நேரம் ஜனாதிபதி செப்டம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். எக்ஸ்போ மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.