காலி மீன்பிடி துறைமுகத்தில் தீ
காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இத் தீவிபத்தினால் துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த சுமார் நான்கு படகுகள் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து காலி துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.