பெருக்குவட்டான், அல் மின்ஹாஜில் புலமைப் பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பாராட்டு விழா அண்மையில் (06) பாடசாலை அதிபர் எஸ்.எச்.எம். அஸான் தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜே. எம்.பைஸல் கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான யூ.ஜே.எம்.றிபாஸ், ஏ.எச்.எம். ஹாரூன், கே.எம்.எம். பைஸர் மரிக்கார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் 06 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதோடு, 100 புள்ளிகளுக்கு மேல் 10 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 09 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சித்தி அடைந்த வீதத்தின் பிரகாரம் 100% சித்தி அடைந்து புத்தளம் கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றுள்ள மூன்று பாடசாலைகளில் இந்த பாடசாலையும் உள்ளடங்குவதாக அதிபர் அசான் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் இந்த நிகழ்வின்போது பெறுமதியான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி, பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேளை சித்தி அடைந்த ஆறு மாணவர்களுக்கும் அவர்களது தொடரான கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுமதியான மேசையும் கதிரையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
ஊரின் தனவந்தர்கள் பலர் இந்த பரிசுகளை வழங்குவதற்கு அனுசரணை வழங்க முன் வந்திருந்தார்கள்.
புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்:
எம். ஜே. ஜெஸா ஆபா -151, ஏ. ஆயிஷா – 151, ஐ. நுபைத் – 146, என். ஆயிஷா – 146, ஆர். நஹா – 144, ஆர். அப்ரின் – 139.
100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள்:
எம். எப். ஸம்ழா 131, எம். எச். ஹன்பல் 131, ஏ. ஆர். அயாஸ் 130, எப்.எப். சிப்ரா 119 , ஆர் றபா மர்யம் 117, எப். எப். ஸாபித் 116, ஏ.எச்.வபா 113, ஏ.அஸ்கா 108, எப்.எப்.பஹ்தா 107,எம்.ஆர். யூனுஸ் 102.
70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்:
எம்.என். ஹதீஜா 99, எச். பிலால் 95, டீ. தஸ்லீமா 92, ஆர். ஆமினா 80,யூ.அப்வான் 79, எச்.ஹன்பல் 79,எம்.எம்.இபாத் 77, ஆர்.ஆயிஷா 76.











(எம்.யூ.எம்.சனூன்)