உள்நாடு

இலங்கை – சவூதி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் துணைத்தலைவராக ஆதம்பாவா எம்.பி தெரிவு

இலங்கை – சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினை ஸ்தாபிக்கும் கூட்டம் (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் பங்கேற்புடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தின் போது இலங்கை – சவூதி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.

இலங்கை தரப்பில் போஷகர்களாக
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்கஹ்தானி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க ஆகியோரும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்கவும் உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் பொருளாளராக தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முலாஃபர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *