வாகன இறக்குமதி தொடரும்; பாராளுமன்றில் ஜனாதிபதி
வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை மீண்டும் உறுதிப்படுத்தினார் .
தொடர்ந்து பேசிய அவர், “வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்ற வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆண்டு நீங்கள் வாகனம் ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு நீங்கள் வாகனம் ஒன்றை வாங்கமுடியும் – எதுவும் மாறாது.”என்று தெரிவித்தார்.
சில நபர்கள் தவறான கூற்றுக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார், மேலும் தற்போதைய கொள்கையை மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் உறுதியளித்தார்.