மாவனல்லை ஆயிஷா ஸித்தீகா வெள்ளி விழா கண்காட்சி இன்று ஆரம்பம்
மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா சித்தீக்கா உயர் கல்விக்கான ( தாய்மை அபிருத்திக்கான உயர் கல்வி) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
இந்த கண்காட்சி 2025 ஆகஸ்ட் மாதம் 07 – 11 ஆம் திகதி வரை தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதன் கலாபீட வளாகத்தில் நடைபெறும்.
“அருள் மிகு
குடும்பம் – இன்பம் நிறைந்த இல்லம்” என்ற தொனிப் பொருளில் இந்த கண்காட்சியை கலாபீட மாணவிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மகளிர் உயர் கல்விக்கான இந்த கலாபீடம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மர்ஹூம் அஷ்ஷெய்க் மெளலவி இப்ராஹீம் அவர்களின் சிந்தனையில் இன்னும் சில இஸ்லாமிய சமூகத்தில் மிளிரும் கல்விமான்களால் உருவாக்கப்
பட்டதாகும்.
இதன் கடந்த கால் நூற்றாண்டு கால வளர்ச்சிப் பயணத்தின் பங்காளிகளாக மாவனல்லை பிரதேச தனவந்தர்கள், கொடைவள்ல
ல்கள், கல்விமான்கள், சமுகத் தொண்டர்கள் என்று பலரும் இருந்து வருகின்றனர்.
உள்நாட்டு வெளிநாட்டு நிதி வழங்குனர்கள் என்று பலரும் இந்த கலாபீடத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கரை கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.
இலங்கை தேசம் முழுவதிலும் புகழ் மனம் பரப்பும் இந்த கலாபீடத்திற்கு வருடா வருடம் மாணவிகளை சேர்ப்பதற்காக கடுமையான போட்டி நிலவுகின்றது
இங்கு அனுமதிக்கப்ப
டுகின்ற மாணவிகள் இங்கு கற்கின்ற காலப்பகுதியில் வெறுமனே புத்தகப் படிப்பை மாத்திரமன்றி வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் கற்றுக்கொண்டவர்களாக பரந்து விரிந்த அறிவோடு இஸ்லாமிய சன்மார்க்க அறிவை சுமந்த இல்லத்தரசிகள் என்ற அந்தஸ்தோடு வெளியே செல்கின்றனர்.
அவர்களுக்காக மிகவும் சிறந்த தராதரமும் அறிவு முதிர்ச்சியும் பெற்ற விரிவுரையாளர் குழாம் ஒன்று இயங்கி வருவது சிறப்பம்சமாகும்.
இத்தகைய ஒரு கல்விக்கூடம் எமது மாவனல்லை என்ற ஊரில் இருந்து இலங்கை திருநாட்டிற்கே அறிவுக்கைல போதிக்கும் கேந்திர நிலையமாக அமைந்திருப்பது இப்பிதேசத்தின் பெருமைக்கு மகுடம் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
(எம்.எஸ். அமீர் ஹூசைன்)