பூனேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..!
பூனேவ 10 வது மைல்கல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடையவராவார்.
இவர் தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)